நீலகிரி: உதகை மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக நீலகிரிக்கு வருகை தந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வரவேற்றார்.

சென்னையிலிருந்து கோவை வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கார் மூலம் உதகை சென்றார். அவரை நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஆகியோர் வரவேற்றனர். உதகை தாவரவியல் பூங்கா அருகே இருக்கும் ராஜ்பவனில் தங்கும் அவர், நாளை மாலை 3.45 மணிக்கு நடக்கும் 122-வது மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் பங்கேற்கிறார். அப்போது, மலர் கண்காட்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார்.
ஜூன் 2-ம் தேதி வரை உதகையில் தங்கும் ஆளுநர், பல்வேறு சுற்றுலா தளங்களைப் பார்வையிட்ட பிறகு, மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்கிறார். ஆளுநரின் இந்த வருகையையொட்டி, நீலகிரி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.