கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ்: கோவையின் நிலை என்ன?

கோவை: கேரளாவில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸ் காரணமாக இதுவரை 15 பேர் உயிரிழந்தனர். இந்த வைரஸ் காய்ச்சலானது அம்மாநில மக்களை மட்டுமல்லாது, தமிழக மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


கோவை: கேரளாவில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸ் காரணமாக இதுவரை 15 பேர் உயிரிழந்தனர். இந்த வைரஸ் காய்ச்சலானது அம்மாநில மக்களை மட்டுமல்லாது, தமிழக மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மாவட்டம் கேரள மாநிலத்தின் மிக அருகாமையில் அமைந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கேரளாவில் இருந்து கோவைக்கு வியாபார ரீதியாகவும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் வந்து செல்கின்றனர். அவ்வாறு, வந்து செல்லும் மக்கள் 'நிபா' வைரசால் பாதிக்கப்பட்டிருந்தால், தொற்றும் தன்மையுடைய அந்த நோய் கோவை மக்களிடையேயும் பரவிவிடும் என்ற அபாயம் உள்ளது. மேலும், கோவை மாவட்டத்திற்கும் 'நிபா' வைரஸ் பரவி விடுமோ? என்ற அச்ச உணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், நிபா வைரஸ் மற்றும், அது தொடர்பான கேள்விகளுக்கு விடை தேடி புறப்பட்டோம்...!

புதிய அரக்கன்

தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த ஆண்டு 'டெங்கு' என்ற ஒரு வைரஸ் பரவியது. பலரை காவு வாங்கிய இந்த வைரஸ் காய்ச்சல் மக்களை பீதியடையச் செய்தது. இந்த காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் மட்டும் சுமார் 40 பேர் பலியாகினர். தற்போது அந்த காய்ச்சலின் தாக்கம் குறைந்து மக்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் 'நிபா' என்ற பெயரில் புதிதாக ஒரு வைரஸ் (அரக்கன்) கேரளாவுக்குள் நுழைந்துள்ளது.



 

நிபா வைரஸ்

மலேசியாவில் நிபா என்ற கிராமத்தில் இந்த வைரஸ் காய்ச்சலின் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதனால், இந்த காய்ச்சலுக்கு 'நிபா' என்று பெயரிடப்பட்டது. பழம் திண்ணும் உயிரினங்களான வௌவால் மற்றும் காட்டு உயிரினங்களிடம் இருந்து இந்த வைரஸ் காய்ச்சல் உருவாவதாகவும், அதிலும் குறிப்பாக, வௌவால்களிடமிருந்து தான் இந்த நோய் பரவுவதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.



முதலில் செல்ல பிராணிகளாக நம் வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற உயிரினங்களை தாக்கும் இந்த வைரஸ் பிறகு மனிதர்கள் மீதும் தொற்றிக்கொள்கிறது. எளிதில் தொற்றும் தன்மையுடைய உயிர்க்கொல்லி வைரஸ் என்பதால்,  அது பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.

மருந்தில்லை

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வைரஸ் காய்ச்சல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், போருக்கு அணுகுண்டு தயாரிப்பதில் முனைப்பு காட்டுபவர்கள், மனித உயிர்க் கொல்லியான இந்த வைரஸ் கிருமியை அழிக்க ஆர்வம் காட்டவில்லை. அதனாலேயே இன்னும் இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. இதன் விளைவு மனித மரணங்கள்.

இந்த நோய் தாக்குதலில் இருந்து விடுபட தூய்மை ஒன்றே மருந்தாக உள்ளது. உதாரணமாக, உணவு உண்ணும் முன் கைகளை சோப்பு போட்டு கழுவுதல், காய்கறிகள், பழங்களை கழுவிய பின்னர் பயன்படுத்துதல், பூச்சிகள் விலங்குகள் கடித்த பழங்கள் உண்பதைத் தவிர்த்தல், போன்றவற்றை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும், வீட்டில் வளர்க்கும் பிராணிகளுக்கு நோய் தொற்று இல்லை என்பதை உறுதி செய்து அவற்றை பாதுகாப்பாக வளர்த்தல், மற்றவர் சாப்பிட்ட உணவை சாப்பிடுவதை தவிர்த்தல், தண்ணீரை வாய் வைத்து குடிப்பதை தவிர்த்தல் போன்றவையும் இந்த வைரஸ் நம்மைத் தாக்காமல் இருக்க நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளாகும்.

அதோடு காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து, சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அறிகுறிகள்

நிபா வைரஸ் தாக்கியவருக்கு முதல் அறிகுறியாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். பின், கடுமையான தலைவலி, காய்ச்சல் உண்டாகும். இந்த நோய் தாக்குதல் மூளையை பாதிக்கும். அதேபோல் இதயமும் செயல்படாமல் போய்விடும். நிபா வைரசால் பாதிக்கப்பட்டு மீண்டும் உயிர் பெறுபவர்கள் எண்ணிக்கையில் மிக சொற்பம்.



தற்போது கேரளா-வில் பரவிக்கொண்டிருக்கும் இந்த நிபா வைரஸ், அம்மாநிலத்தின் மிக அருகில் இருக்கும் கோவையை தாக்காமல் இருக்க தமிழக சுகாதாரத் துறையினர் தனி கவனம் செலுத்தி வருகின்றனர்.

இது குறித்து மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார துறை இணை இயக்குனர் M.சந்திரசேகர் கூறியதாவது,

"நிபா வைரஸ் நோய் தொடர்பாக நாங்கள் அனைத்து மருத்துவமனைகளுக்கும் எச்சரிக்கை கொடுத்துள்ளோம். கோவை மாவட்டம் கேரள மாநிலத்திற்கு அருகில் இருப்பதால் இங்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நோய்க்கு என்று பிரத்தியேக மருந்துகள் இல்லை.

இதனால் (சார்ந்த சிகிச்சைகள்) 'சப்போட்டிவ் ட்ரீட்மெண்ட்' அளிப்போம். இந்த காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட்டு வந்தால் முதலில் தனி அறைகள் மூலம் பாதுகாப்பான சிகிச்சைகள் கொடுக்க தயார் நிலையில் உள்ளோம். இந்த நோய் தொடர்பாக ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றிற்கு போதிய வசதிகளை செய்து கொடுக்க உள்ளோம். எந்த நோயும் வந்த பின்பு நடவடிக்கைகள் எடுப்பதை விட வரும் முன் காக்க எங்கள் துறை தயாராக உள்ளது." என்றார்.

எனவே, கோவை மக்களை நிபா-விலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள், காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள்..!

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...