உதகை - கூடலூர் சாலையில் பேருந்து விபத்து: 18 பேர் படுகாயம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை - கூடலூர் சாலையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை - கூடலூர் சாலையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் சொந்த வாகனங்கள் மூலம் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், உதகையில் உள்ள தனியார் கோவில் திருவிழாவிற்கு கடந்த 18-ம் தேதி ஆந்திரா, மகாராஷ்டிரா, அரியானா மாநிலத்திலிருந்து விழாவில் பங்கேற்க 100-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இன்று திருவிழா முடிந்த நிலையில், பேருந்து மூலம் அவர்களது ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள 9வது மைல் பகுதியில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



இதில், பேருந்தில் இருந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் பயணித்த நிலையில், சுமார் 20 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், 2 பேரின் நிலை கவலைக்கிடம் என்பதால், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்யப்பட்டு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கோடை சீசன் சமயத்தில் இந்த விபத்து நடைபெற்றதால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...