சென்னை: நடிகர் கமலஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் பரிசீலனைக்காக ஏற்றுள்ளது.

நடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை சமீபத்தில் தொடங்கினார். இந்த கட்சிக்காக மய்யம்.காம் (www.maiam.com) என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் தொடங்கப்பட்டது. கட்சியில் சேர விரும்புவோர், மய்யம் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் படி கமல் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்தியா, அமெரிக்கா, அரபு நாடுகள், சிங்கப்பூர், இங்கிலாந்து, மலேசியா , சவுதி அரேபியா, கனடா ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் மய்யம் இணையதளத்தை பார்வையிட்டு கட்சியில் உறுப்பினராக சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் பரிசீலனைக்கு ஏற்றது. கட்சியைப் பதிவு செய்வதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால், வரும் 31-க்குள் தெரிவிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.