சேலஞ்சர் துரைக்கு ஜூனியராக இருந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தற்போது அவரையே கைது செய்கிறார் - டி.டி.வி.தினகரன்

கோவை: அ.தி.மு.க.,வில் சேலஞ்சர் துரை போன்றவர்களுக்கு ஜூனியராக இருந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தற்போது அவர்களையே கைதுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை: அ.தி.மு.க.,வில் சேலஞ்சர் துரை போன்றவர்களுக்கு ஜூனியராக இருந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தற்போது அவர்களையே கைதுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவையில் கைது செய்யப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் 56 பேரை அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று கோவை மத்திய சிறையில் சந்தித்தார்.



பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தூண்டுதலின் பேரிலே அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கோவை மாவட்ட செயலாளர் சேலஞ்சர் துரை உட்பட 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனங்களை உடைத்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில், நடுநிலை தவறிய டி.எஸ்.பி.வேல்முருகன் தலைமையிலான காவல்துறை மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். தற்போது கைது செய்யப்பட்டுள்ள 56 பேரும் ஜாமினில் வந்தவுடன் எனது தலைமையில் தொண்டாமுத்தூரில் செயல் வீரர்கள் கூட்டம் நடத்தப்படும்.

ஜூனியர்

மக்கள் எங்கள் பக்கம் உள்ளதால் ஆளும் கட்சியினர் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர். அதனால் தான் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க.,வில் சேலஞ்சர் துரை போன்றவர்களுக்கு ஜூனியராக இருந்த எஸ்.பி.வேலுமணி தற்போது அவர்களையே கைது செய்யத் துணிந்துள்ளார். கத்தி எடுத்தவன் கத்தியால் தான் அழிவான் என்பதை எஸ்.பி.வேலுமணி உணர்ந்துகொள்ள வேண்டும்.ஆர்.கே நகரில் நான் போட்டியிட்ட போது என் பின்னால் ஆட்டோவில் தொப்பியுடன் ஓட்டு கேட்டவர் தான் எஸ்.பி.வேலுமணி.

சசிகலா முன்பு மண்டி போட்டு வந்து பதவி ஏற்றவர் தான் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. மடியில் கணம் உள்ளதால் மத்திய அரசுக்கு பயந்து எங்களை வெளியேற்றினர். டெல்லியில் இருந்து உத்தரவு வந்தால் பழனிசாமி, மவுன சாமியாகத்தான் இருப்பார்.

பசுமை வழிச் சாலை

சேலம் - சென்னையிடையே 8 வழி பசுமை வழி சாலை அமைப்பது தேவையற்றது. இது தொடர்பாக அங்கு போராட்டம் நடத்த மக்கள் எங்களை அழைத்துள்ளனர். கர்நாடகத்தில் ஜனநாகய படுகொலை நடத்தப்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளது. காவிரி பிரச்சனை இருப்பதால் தான் அங்கு யார் ஆட்சிக்கு வந்தாலும் இதுவரை நான் வாழ்த்துகள் தெரிவிக்கவில்லை. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் தமிழர்களின் உரிமையைப் பறிக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Video: Laxman

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...