கோவை: கோவை மாவட்டத்தில் வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ள வேலை வாய்ப்பு முகாமினை, படித்த மற்றும் பயிற்சி பெற்ற இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிய கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கும் இந்த முகாமில், படிக்காதவர்கள் முதல் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, அனைத்து பட்டதாரிகள், முதுகலை படித்தவர்கள், ஐ.டி.ஐ. படிப்பு பயின்று சான்றிதழ் பெற்றவர்கள் மற்றும் டிப்ளமோ கல்வித்தகுதி உடையவர்கள், ஓட்டுநர்கள், பிட்டர் டர்னர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் போன்ற தொழிற்கல்வி பயின்றவர் வரை என அனைத்து கல்வித் தகுதி உடையவர்களுக்கும் நேர்காணல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு பெறுபவர்களிடம் இருந்து எந்தவித கட்டணமும் வாங்கப்படமாட்டாது. மேலும், வேலை பெறும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.