சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, தன் மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டம் நேற்றிரவு புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ரெய்னாவின் அபார ஆட்டத்தால், 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. மேலும், புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டது.
இந்த நிலையில், கேப்டன் தோனி போட்டி முடிந்த பிறகு, தனது மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடி மகிழ்ந்தார். சக வீரர்கள் சூழ்ந்திருக்க மண்டியிட்ட நிலையில் இருந்த தோனியின் தலையில் இருந்த தொப்பியை அவரது மகள் ஷிவா கழற்றி மாற்றியதும், வெற்றி மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
எங்கு போட்டி நடந்தாலும், தனது மகளை கையில் தூக்கிக் கொண்டு செல்வது, வீட்டில் மகளுடன் தோனி விளையாடுவது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் ஏற்கனவே வைரலாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.