அன்னூர் அருகே வேன் மரத்தில் மோதி விபத்து: இருவர் பலி - பத்து பேர் படுகாயம்

மேட்டுப்பாளையம்: உதகைக்கு சுற்றுலா செல்வதற்காக வந்தவர்களின் வேன் அன்னூர் அருகே மரத்தில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

மேட்டுப்பாளையம்: உதகைக்கு சுற்றுலா செல்வதற்காக வந்தவர்களின் வேன் அன்னூர் அருகே மரத்தில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பகுதியில் இருந்து 15-க்கும் மேற்பட்டோர் உதகைக்கு சுற்றுலா செல்வதற்காக மினி வேன் மூலம் நேற்று இரவு புறப்பட்டு வந்தனர். இன்று காலை மேட்டுப்பாளையம் அன்னூர் சாலை வழியாக உதைக்கு வந்த வேன் ஜெ.ஜெ நகர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலை அருகே இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், வேனில் பயணித்த ரிஷி என்ற ஒன்பது வயது சிறுவன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து, இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பினர்.

மேலும், உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்த போலீசார், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...