கோவை : அங்கப்பர் சிலம்பக் கூடம் மற்றும் ரோட்ரேக்ட் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சார்பில் குழந்தைகளுக்கு 15 நாள் சிலம்ப பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

ஆர்.எஸ்.புரத்தை அடுத்த லாலி ரோடு அருகே உள்ள மைதானத்தில் நடைபெற்றும் 'ரௌத்திரம் பழகு' என்ற இந்த நிகழ்வு நேற்று தொடங்கியது. தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பக் கலையை போற்றும் வகையில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிதி உதவி அளித்து வருகிறது.

நேற்று நடைபெற்ற சிலம்ப பயிற்சி தொடக்க விழாவில் சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு சிலம்ப திறமைகளை வெளிப்படுத்தினர். மொத்தம் 15 நாட்கள் நடைபெறும் இந்த இலவச பயிற்சியில் பங்கு பெறுபவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.

பயிற்சி வகுப்பினை அங்கப்பர் சிலம்பக் கூடத்தின் நிறுவனர் டி.ஏ. அங்கப்பன் மற்றும் இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜூன் சம்பத் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.