நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள சாண்டிநல்லா ஆடு இனவிருத்தி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சாண்டிநல்லாவில் ஆடு இனவிருத்தி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் செயல்பாடு குறித்தும் வளர்ச்சி பணிகள் குறித்தும் தமிழக கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். செம்மறி ஆடுகளின் வளர்ப்பு மற்றும் ரோமங்கள் சேகரிப்பு குறித்து தெரிந்து கொண்ட அவர், ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் அவர் பேசுகையில், முதலமைச்சரின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையங்களை ஆய்வு செய்து கால்நடைகள் உற்பத்தியை பெருக்கவும், கால்நடை தீவனங்களை உற்பத்தியை பெருக்கவும் இந்த ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்ட மாடு இனவிருத்தி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தற்போது 7 லட்சம் உரை விந்து குச்சிகள் தமிழகம் முழுவதும் கொடுக்க தயார் நிலையில் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள செம்மறி ஆடுகளை காப்பற்றும் விதமாக கால்நடை மருத்துக் கல்லூரியின் சார்பாக 700 ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்டு வரும் இம்மையம் மேலும் விரிவாக்கம் செய்யப்படும். இங்கு உள்ள நீராதாரங்களை அதிகப்படுத்தி மேலும் 25 ஏக்கர் நிலங்களில் கால்நடை தீவனங்கள் அதிக அளவு உற்பத்தி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்படி உற்பத்தி செய்யப்படும் தீவனங்கள் சரிவர பாதுகாக்கப்பட்டு கிடங்குகளில் சேகரிக்கப்படும். இதனால், நீலகிரி மாவட்டத்தில் பனிப்பொழிவு காலங்களில் உள்ள தீவன பற்றாக்குறை முற்றிலும் சரிசெய்யப்படும்.

அமெரிக்காவில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையங்களை சேர்ந்தவர்கள் இன்னும் ஓரிரு மாதங்களில் தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இங்கு உள்ள கால்நடை ஆரய்ச்சி மையங்களை கண்ட பிறகு இங்கு மேற்கொள்ள வேண்டிய மேம்பாடு பணிகளை குறித்து தமிழக முதல்வரிடம் கலந்தாலோசித்து நவீன முறையில் கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடை பராமரிப்பு குறித்து ஒப்பந்தம் போட உள்ளனர். இதனால், அமெரிக்காவிற்கு நிகராக கால்நடை தீவனங்களை உற்பத்தி செய்து தமிழக்தில் கால்நடைகள் வளர்ச்சியை பெருக்க நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
மேலும், தமிழகம் முழுவதும் நாட்டுக்கோழி உற்பத்தியை பெருக்கும் வண்ணம் அனைத்து கிராமப்புற பகுதிகளில் உள்ள ஏழை, எளியவர்கள் பயன்பெரும் வண்ணம் புதியதாக நாட்டுக்கோழிகளை உற்பத்தி செய்து பண்ணைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். இது முதற்கட்டமாக நீலகிரி மாவட்டத்தில் துவங்க உள்ளது, கூடிய விரைவில் இந்த மாவட்ட ஏழை எளிய மக்களை கண்டறிந்து விலையில்லா 250 நாட்டுக்கோழிகள் வழங்கப்படும். இவர்கள் இதற்கான ஷெட் அமைப்பதற்க்காக 25,000 வழங்கப்படும். மேலும், புறக்கடை வளர்ப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் 20 கோழிகள் வழங்கப்படும், என்று கூறினார்.