கோவை: தென் கைலாய பக்தி இயக்கம் சார்பில் இன்று நடைபெற்ற வெள்ளிங்கிரி சுத்திகரிப்பு பணியில் 315 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர்.

காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்த இந்த சுத்திகரிப்பு பணியில் கோவை, சென்னை, கும்பகோணம், வேளூர், திருச்சி, பொள்ளாச்சி, சிதம்பரம், சிவகாசி, மதுரை, நாகப்பட்டினம் மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்து தன்னார்வத் தொண்டர்கள் வெள்ளியங்கிரி மலைப்பாதை மற்றும் முதல் ஐந்து மலைகளில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் சுத்திகரிப்பு பணியை மேற்கொண்டனர்.

வெள்ளியங்கிரியின் இயற்கை, அழகு மற்றும் புனிதத்தை காத்திடும் பொருட்டு, தென் கைலாய பக்தி இயக்கம், வெள்ளிங்கிரி சுத்திகரிப்பு பணியை, தங்கள் செயல் திட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாக கொண்டு செயல்பட்டு வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மே 27 ஆம் தேதியன்றும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறும். மேலும், விவரங்களுக்கும் மற்றும் தூய்மைப்படுத்தும் பணியில் தன்னார்வலராக இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள அலைபேசி எண்ணை தொடர்புகொள்ளவும் - 8300083111.
தென்கைலாய பக்தி இயக்கம் என்பது வெள்ளிங்கிரி பக்தர்களால் தென்கைலாய பக்தி பேரவை எனும் இலாப நோக்கம் இல்லாத அமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள ஆன்மீக இயக்கமாகும். இந்த இயக்கம் வெள்ளியங்கிரி பக்தர்களிடமும், பொதுமக்களிடமும் இம்மலையின் புனிதத்தை பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி வருகிறது.