எடியூரப்பா விவகாரத்தை சிறப்பாக கையாண்ட உச்சநீதிமன்றத்திற்கு ரஜினி வணக்கம்

கர்நாடகாவில் எடியூரப்பா விவகாரத்தில் சிறப்பாக கையாண்ட உச்சநீதிமன்றத்திற்கு வணக்கங்களை தெரிவித்துக் கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் எடியூரப்பா விவகாரத்தில் சிறப்பாக கையாண்ட உச்சநீதிமன்றத்திற்கு வணக்கங்களை தெரிவித்துக் கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினி மக்கள் மன்ற பெண் நிர்வாகிகளிடம் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:- பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்த நாடுகள் முன்னேறி இருக்கின்றன. ரஜினி மக்கள் மன்றத்திலும் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும். 150 தொகுதிகளில் செல்வாக்கு இருப்பதாக வெளியான செய்தி உண்மையாக இருந்தால் மகிழ்ச்சியே. கர்நாடகாவில் ஜனநாயகம் வென்றுள்ளது.

எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் கொடுத்தது கேள்விக்கு உரியது. இதனை சிறப்பாக கையாண்ட உச்சநீதிமன்றத்திற்கு வணக்கங்கள். கர்நாடகாவில் இனி அமைய இருக்கும் அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி விவகாரத்தில் செயல்பட வேண்டும். கட்சி தொடங்கிய பின்னரே கூட்டணி குறித்துப் பேச முடியும். எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கவே நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம், என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...