கோடை சுற்றுலா: லேம்ப்ஸ் ராக் பகுதியின் சிறப்புகள்

நீலகிரி மாவட்டம் உதகைக்கு அடுத்தபடியாக இருக்கும் குன்னூரில் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலமாக விளங்குவது லேம்ப்ஸ் ராக் காட்சிமுனையாகும்.


நீலகிரி: கோடைக்காலம் தொடங்கி விட்டதால், சமவெளி பகுதிகளில் நிலவும் வெப்பத்தை சமாளிக்க சுற்றுலாப் பயணிகள் குளிர்ச்சியான பகுதிகளுக்கு படையெடுக்கத் துவங்கியுள்ளனர். மேலும், ஆண்டு முழுவதும் உழைத்து களைத்த மக்கள், கோடை விடுமுறையைக் குடும்பத்துடன் கழிக்க மலை பிரதேசங்களுக்கும், குளிர் பிரதேசங்களுக்கும் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக, சுற்றுலா என்றாலே நம்ம ஊர் மக்கள் வண்டியைக் கிளப்பி உதகைக்குப் புறப்பட்டு விடுவார்கள்.

சரி..! அப்படி, உதகைக்கு செல்பவர்கள் எந்தெந்தப் பகுதிகளுக்கு செல்லலாம். அந்தப் பகுதியின் சிறப்புகள் என்ன..? என்பதை விளக்குவதற்காகத் தான் இந்த வாராந்திர கட்டுரை.

நீலகிரி மாவட்டம் உதகைக்கு அடுத்தபடியாக இருக்கும் குன்னூரில் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலமாக விளங்குவது லேம்ப்ஸ் ராக் காட்சிமுனையாகும். இது குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியிலிருந்து பார்த்தால் காரமடை, மேட்டுப்பாளையம், கோவை போன்ற பகுதிகளின் பறவை பார்வை காட்சிகள் தெரியும். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் காட்சிமுனை பகுதிக்கு செல்ல பொதுவான கட்டணமாக ரூ 7-ம், கேமிரா பயன்பாட்டிற்கு ரூ. 20-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், கார்,வேன், பேருந்து போன்ற வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணமாக ரூ. 10 வசூலிக்கப்படுகிறது. லாம்ஸ்ராக் காட்சிமுனை பகுதிக்கு செல்லத் தனியாக பேருந்து வசதி கிடையாது. ஆடர்லி செல்லும் பேருந்தில் தான் செல்ல வேண்டும்.



அதேபோல, இந்த சாலை மார்க்கமாக குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து 12 கி.மீ., தொலைவில் மேலும் ஒரு காட்சிமுனை அமைந்துள்ளது டால்பின் மூக்கு போன்று இந்தக் காட்சிமுனையின் பாறைகள் அமைந்துள்ளதால், இதற்கு டால்பினோஸ் காட்சி முனை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் காட்சிமுனைக்கு செல்லவேண்டுமானால், குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆடர்லி பேருந்தில் தான் பயணம் செய்ய வேண்டும். வாகனங்களில் சென்றால் எளிதில் சென்று வரலாம். பார்க்கிங் கட்டணமாக ரூ. 10 வசூலிக்கப்படுகிறது.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...