கோவை: அரியவகை பட்டாம்பூச்சி இனங்களில் ஒன்றான நீலகிரி நீலி என்ற வகையை கல்லூரி மாணவர் ஒருவர் படம் பிடித்துள்ளார்.
கோவை : அரியவகை பட்டாம்பூச்சி இனங்களில் ஒன்றான நீலகிரி நீலி என்ற வகையை கல்லூரி மாணவர் ஒருவர் படம் பிடித்துள்ளார்.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் நீலகிரி நீலி என்ற பட்டாம்பூச்சி ஒரு அறிய வகை பட்டாம்பூச்சி இனமாக உள்ளது. அதிக தூரம் பயணிக்காத குணம் கொண்டவை இந்த பட்டாம்பூச்சிகள். பெரும்பாலும் மரத்தின் மேற்பரப்புகளில் வாழும் இந்த வகை பட்டாம்பூச்சி மனிதர்களின் கண்களுக்கு அகப்படாது. இந்த நிலையில், பட்டாம்பூச்சிகளின் மீது ஆர்வமுடைய லெனின் டேனி ராஜ் என்பவர் கல்லாறு அருகே இந்த பட்டாம்பூச்சியை புகைப்படம் எடுத்துள்ளார்.
இது குறித்து, 'ஆக்ட் ஆஃப் பட்டர்பிளை' என்ற அமைப்பின் நிறுவனர் மோகன் பிரசாத் கூறுகையில், "நீலகிரி நீலி-யை கடந்த 2013-ம் ஆண்டு கல்லாறு அருகே பார்த்தோம். பிறகு இப்போது தான் அகப்பட்டுள்ளது. அபூர்வமான இந்த பட்டாம்பூச்சியை பார்ப்பது அரியது." என்றார்.

இந்த பட்டாம்பூச்சி இனம் கடந்த 1883-ம் ஆண்டு நீலகிரி மலைப் பகுதிகளில் முதன் முறையாக காணப்பட்டது.
நீலகிரி நீலி-யை புகைப்படம் எடுத்த லெனின் டேனி ராஜ் இத்தகைய அரியவகை பட்டாம்பூச்சியை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார். உணர்கிறேன்.