கோவை : கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடத்தி வந்த தொலைதூர கல்வி திட்டங்களை ரத்து செய்வது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளிலும் தொலைக்தூர கல்வி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் அடிப்படை வசதிகள், முறையான பாட திட்டங்கள் போன்றவை சரியாக நடைபெறவில்லை என கூறி இந்த மையங்களை மூட வேண்டும் என சுய நிதி கலை அறிவியல் கல்லூரி நிர்வாகிகள் சிலர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர்.
இதனிடையே, நேற்று நடைபெற்ற ஆட்சிமன்ற கூடத்தில் தொலைதூரக் கல்வி மையங்களில் இந்த ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடத்துவதில்லை, சுயநிதி கல்லூரிகளின் முதல்வர்களின் ஓய்வு பெறும் வயது ஏற்கனவே முடிவு செய்தபடி தொடரும் என முடிவெடுக்கப்பட்டது. மேலும், இந்த மையங்களை மூடுவதால் ஏற்படும் வருவாய் இழப்பினை ஈடுகட்ட தனியார் கல்லூரி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரம் தொலைதூரக் கல்வி மையங்களில் படித்து வரும் மாணவர்கள் 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு படிப்புகளை தொடரலாம் என்றும் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.