பெங்களூர் : கர்நாடக முதலமைச்சராக பதவி வகித்துவந்த எடியூரப்பா தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அம்மாநில அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சியமைக்க தனிப்பெரும் கட்சியாக இருந்த பா.ஜ.க.,வை அழைத்தார் அம்மாநில ஆளுநர். இதற்கு காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்க விசாரித்த நீதிமன்றம் இன்று மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில், அம்மாநில முதலமைச்சராக பதவியில் இருந்த எடியூரப்பா தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பேரம்
பெரும்பான்மையை நிரூபிக்க மற்ற கட்சிகளில் எம்.எல்.ஏ.,க்களை இழுக்க பேரம் பேசியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியானது. இதனால், கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக கருதிய அக்கட்சித் தலைமை எடியூரப்பாவை ராஜினாமா செய்ய வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரும்பான்மையை நிரூபிக்க கூட்டப்பட்ட சட்டப்பேரவையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.