நீலகிரி: உதகையில் மருத்துவக் கல்லூரி அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று 122-வது மலர் காட்சி தொடங்கியது. ஐந்து நாட்கள் நடைபெற இருக்கும் இந்த கண்காட்சியினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

காவிரி பிரச்சனையில் இறுதி தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு சாதகமாக இருக்கும். சிறு தேயிலை விவசாயிகளுக்கு ஏற்கனவே வழங்கியதைப் போல் பசுந்தேயிலை கிலோவிற்கு 2 ரூபாய் மானியமாக வழங்கப்படும். உதகை மத்திய பேருந்து நிலையத்தை சீரமைக்க 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி அமைக்கும் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும். நாட்டின் முதலாவது வன உயிரின மண்டலம் நீலகிரி மாவட்டத்தில் அமைந்திருப்பதும், பைகாரா, குந்தா உள்ளிட்ட பல்வேறு நீர் மின் நிலையங்கள் இருப்பதும் நீலகிரிக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக உள்ளது.
சமூக அக்கரையோடு மின்சாரத்தை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும். சேமிக்கும் ஒவ்வொரு யூனிட் மின்சாரம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவிக்கரமாக இருக்கும். சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் தமிழகம், நாட்டிலேயே சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது. சிறந்த காவல் நிலையங்களில் கோவை ஆர்.எஸ். புரம் காவல் நிலையம் முதலிடத்தையும், சென்னை அண்ணா நகர் காவல் நிலையம் ஐந்தாவது இடத்தையும் பெற்றிருப்பது இதைத் தெளிவு படுத்துகிறது.
விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டுக்காக இதுவரை 3,200 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட தென்னை விவசாயிகளின் நலன்களை கருத்தில் கொண்டு நீரா பானம் தயாரிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.