கோவை: தேசிய அளவில் உயரிய விருதுகளைப் பெற்ற பெங்காலி மொழிப்பட இயக்குநர் மிரினல் செரினின் 96-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது பெருமைகளை விளக்கும் வகையிலான படங்கள் கோவையில் திரையிடப்பட்டன.

1981-ம் ஆண்டு சால்சித்ரா திரைப்படத்தின் மூலம் மிரினல் செரின் திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கி அவர், சத்யராஜ் ரே, ரித்விக் கடாக் போன்ற சிறந்த இயக்குநர்களை போல திரையுலகில் கொடி கட்டிப் பறந்தார். இந்த நிலையில், மிரினல் செரினின் 96-வது பிறந்த நாள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. கோவை மாவட்டம் பீளமேட்டை அடுத்த, ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள கிளஸ்டர்ஸ் இன்ஸ்டிடியூட்ஸ் மீடியா அன்ட் டெக்னாலஜியில் ஆவன் கிரேடு பிலிம் கம்யூன் சார்பில் நடத்தப்பட்டது.

கிளஸ்டர் மீடியா ஹவுஸ், கொனங்கல் பிலிம் சொசைட்டி, சினிமா கிளப் ஆப் கோவை மற்றும் பெங்காலி அசோசியேஷன் ஆப் கோவை போன்ற அமைப்புகளும் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், இயக்குநர் மிரினல் செரினின் சிறந்த படங்கள் ஒளிபரப்பப்பட்டன. 25-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள அவர், இந்தியா சினிமாவில் மிக உயரிய விருதான தாதாசாஹிப் பால்கே விருது உள்பட 7 சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார்.