கோவை: கோவை மாநகராட்சியால் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், அந்தந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியும் மக்களுக்கு பயன்படாமல் வீண் விரயமாகி வருகிறது.

கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசின், ஜவஹர்லால் நேரு நகர் புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், மாநகராட்சி பகுதியில் மூன்று கட்டங்களாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக உக்கடம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டது. அங்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, குறைந்த விலைக்கே சுத்திகரிக்கப்பட்ட நீர் விற்பனையாகி வருகிறது. மூன்றாம் கட்டமாக, ஒண்டிப்புதூர் பகுதியில் அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தற்போது சோதனை அடிப்படையில் இயங்கி வருகிறது.
முடக்கம்
இரண்டாம் கட்ட பாதாள சாக்கடை திட்டத்திற்காக நஞ்சுண்டாபுரம் பகுதியில் 6.50 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.33 கோடி மதிப்பீட்டில் 40 எம்.எல்.டி கொள்ளளவு கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த பணி கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், ஆரம்ப கட்ட நிலையிலேயே இந்த திட்டம் முடங்கிக் கிடக்கிறது.

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு நலச் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், இந்த விவகாரத்தில் மாநில பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் மாநகராட்சிக்கு எதிராக தீர்ப்பு வந்ததால், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான கட்டிடப் பணிகள் நிறுத்தப்பட்டன.
மேல்முறையீடு
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதிக்க வேண்டி கடந்த 2016-ம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், மாநகராட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை, அப்பகுதி மக்களின் கண்காணிப்புடன் மாநகராட்சி மேற்கொள்ளலாம் என்றும், காற்று மாசு, ஒலி மாசு ஏற்படாத வகையில் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் மாநகராட்சிக்குச் சாதகமாக தீர்ப்பு வெளியானது.
தீர்ப்பைத் தொடர்ந்து, கட்டுமானப் பனிகளை மீண்டும் தொடங்க மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் எதிர்ப்பு
ஆனால், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமையவிருக்கும் பகுதியை ஒட்டி வசிக்கும் பொது மக்கள், இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அமையவுள்ள இயந்திரங்களில் கோளாறுகள் ஏற்பட்டால், அருகில் வசிப்பவர்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்றுகள் உருவாக அதிக வாய்ப்புள்ளது. மேலும், இந்த சுத்திகரிப்பு மையம் சூரிய மின் சக்தியால் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த திறனை பயன்படுத்தி சுத்திகரிப்புப் பணியை தொடரும் போது, ஏதாவது கோளாறு ஏற்பட்டால், அதிகபட்ச துர்நாற்றம் வீசும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதனால் தான் இத்திட்டத்தை எதிர்த்து வருகிறோம்." என்றனர்.
புதிய திட்ட அறிக்கை
இந்நிலையில், ரூ. 43 கோடி மதிப்பீட்டில் புதிய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் தற்போது தொடங்கியுள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "நஞ்சுண்டாபுரம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்திடமே பணியை ஒப்படைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஒப்பந்த நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டு, 15 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதில் வராத பட்சத்தில் புதிதாக டெண்டர் விடப்பட்டு விரைவில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகள் தொடங்கப்படும்." என்றனர்.
பழைய கணக்கு
முன்னதாக, இந்த சுத்திகரிப்பு மையம் அமைக்கவும், இயந்திரங்கள் கொள்முதல் செய்யவும் மாநகராட்சி சார்பில் ரூ. 18 கோடி வழங்கப்பட்டது. வழக்குகளாலும், ஒப்பந்த நிறுவனத்தினர் பணிகளை மேற்கொள்வதில் கால தாமதம் ஏற்பட்டதாலும் வழங்கப்பட்ட நிதி எந்தப் பயனுமில்லாமல் வீணாகியுள்ளது. பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டிடங்களும், வாங்கப்பட்ட கழிவு நீர் சுத்திகரிப்பு குழாய்களும் இயந்திரங்களும் செடி கொடிகள் சூழ புதர் மண்டிக் கிடக்கின்றன.

காரணமாக அங்குள்ள இயந்திரங்கள் உபயோகிக்கத் தக்க வகையில் இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அன்றைய விலையில் ரூ.18 கோடி கொடுத்து இயந்திரங்களை வாங்கப்பட்டுள்ளது. தற்போது, அதே இயந்திரங்களை மீண்டும் வாங்க வேண்டுமானால் இன்னும் கூடுதல் விலை தான் கொடுக்க வேண்டியிருக்கும்.

கோடிக்கணக்கில் செலவிட்டு வாங்கப்பட இயந்திரங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களை வழக்கு விசாரணை முடியும் வரையிலாவது பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டியுள்ளனர். இதனால், கோடிக்கணக்கான பணம் விரயமாகியுள்ளது. அரசு இயந்திரத்தை நல்ல முறையில் இயக்க வேண்டிய அதிகாரிகள், இந்த இயந்திரங்களை சிதைவடைய விட்டது ஏன்? என்ற கேள்விக்கு மாநகராட்சி நிர்வாகம் என்ன பதில் சொல்லப் போகிறது?