நீலகிரி: கோடை விழாவின் மணிமகுடமாக திகழும் 122-வது மலர் கண்காட்சிக்காக அரசு தாவரவியல் பூங்கா தயார் செய்யும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் கோடைவிழா, கடந்த 5-ம் தேதி காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, கூடலூரில் 10-வது வாசனைப் பொருட்கள் கண்காட்சியும், உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 16-வது ரோஜா கண்காட்சியும் நடந்து முடிந்தன. இந்த நிலையில், உதகையின் மணிமகுடமாக திகழும் அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் 122-வது மலர் கண்காட்சி நாளை தொடங்குகிறது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.
இந்தக் கண்காட்சியைக் காண வரும் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில், ஒரு லட்சம் மலர்களைக் கொண்டு மேட்டூர் அணை, 3,500 மலர்களை கொண்டு பார்பி டால் மாதிரி மற்றும் 25 ஆயிரம் மலர்களைக் கொண்டு வரவேற்பு அலங்காரம் மற்றும் அலங்கார வளைவுகள் அமைக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அது மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில், 40 ஆயிரம் மலர் தொட்டிகளில் 180 ரகங்களில் சால்வியா, பெட் டூனியா, மேரி கோல்டு, பிரெஞ்சு மேரி கோல்டு, டேலியா உள்ளிட்ட மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. மேலும், பல்வேறு மாவட்டங்களிலிருந்து தோட்டக்கலைத் துறை, வனத்துறை மற்றும் பல அரசு துறைகளின் சார்பில் அரங்குகள் மற்றும் விழா மேடை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மலர்களால் பல்வேறு கலை நயங்களுடன் உருவாகி வரும், இந்த மலர் கண்காட்சியை, பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இம்மலர் கண்காட்சி முதன் முறையாக 5 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில், உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் வரும் வாகனங்கள் கோத்தகிரி மார்க்கமாகவும், மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை செல்லும் வாகனங்கள் குன்னூர் மார்க்கமாகவும் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கண்காட்சியை தொடங்கி வைக்க வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வருகையையொட்டி, 5 மாவட்டங்களிலிருந்தும் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.