குப்பைகளால் நிரம்பி வழியுது நொய்யல்

கோவை : தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இடும் குப்பைகளால் நொய்யல் ஆற்றுப்படுகை பாழ்பட்டு வருகிறது.

கோவை : தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இடும் குப்பைகளால் நொய்யல் ஆற்றுப்படுகை பாழ்பட்டு வருகிறது. 



கோவையில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. இந்த நேரத்தில் மாவட்டத்தில் உள்ள குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்த சூழலில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் நொய்யல் ஆற்றுப் படுகை பாழ்பட்டு வருகிறது. தெருநாய்களின் வாழ்விடமாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறிவருகிறது வற்றிப்போன நொய்யல் ஆற்றங்கரை. 



காருண்யா நகர் பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் வற்றாமல் பயணித்த நோய்யலின் கதி இது என்று நொந்து கொள்கின்றனர் ஆர்வலர்கள். 



இது குறித்து நொய்யல் பாதுகாப்பு குழு மற்றும் சிறுவாணி விழுதுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் கூறுகையில், "ஆற்றுப் படுகையில் இருந்த மரங்களை அகற்றுவதும் இந்த வறட்சிக்குக் காரணமாக உள்ளது. நொய்யல் ஆற்றங்கரை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகிறது. இது வரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குப்பைகள் கொட்டப்படுவதோடு, நொய்யலில் கழிவு நீரும் கலக்கப்படுகிறது. இது வேதனையான ஒன்றாகும்." என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...