கர்நாடகாவின் 23-வது முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா

கர்நாடகாவின் 23-வது முதலமைச்சராக எடியூரப்பா இன்று பதவியேற்று கொண்டார். பதவியேற்றவுடனே விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

கர்நாடகாவின் 23-வது முதலமைச்சராக எடியூரப்பா இன்று பதவியேற்று கொண்டார். பதவியேற்றவுடனே விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். 

கர்நாடகாவில் 222 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க., 104 இடங்களை வென்றது. அங்கு ஆட்சியமைக்கத் தேவையான 113 இடங்களை எந்தக் கட்சியும் பெறவில்லை. இதையடுத்து காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சார்பில் 116 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கடிதத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் வாஜூபாய் வாலாவிடம் ம.ஜ.த., தலைவர் குமாரசாமி மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் பெரும்பான்மை இல்லாத போதும் தனிப்பெரும் கட்சி என்கிற முறையில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்தது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று அறிவிக்கக் கோரி காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நள்ளிரவில் மனு அளிக்கப்பட்டது. 



இந்நிலையில், இன்று காலை பெங்களூருவில் ஆளுநர் மாளிகையில் எடியூரப்பாவின் பதவியேற்பு விழா நடைபெற்றது. அவருக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். எடியூரப்பா மட்டுமே பதவியேற்ற நிலையில் அவருடன் வேறு அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய எடியூரப்பா கர்நாடகாவில் ரூ.1 லட்சம் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...