தந்தையின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து தற்கொலை செய்த பிளஸ்-2 மாணவனின் மதிப்பெண்ணை பார்த்து கண்ணீர்விடும் பெற்றோர்கள்

தந்தை குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததால் மனமுடைந்து, நெல்லை வண்ணாரப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவன் தினேஷ் பிளஸ்-2 தேர்வில் 1,024 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

தந்தை குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததால் மனமுடைந்து, நெல்லை வண்ணாரப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவன் தினேஷ் பிளஸ்-2 தேர்வில் 1,024 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கே.ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. கூலித் தொழிலாளியான இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். அவரது, மகன் தினேஷ் நல்லசிவன், நாமக்கல் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்துவிட்டு, நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்தார். 

தந்தையின் குடிப்பழக்கத்தை திருத்த முடியாத சோகத்தில் இருந்த அவர், கடந்த 2-ம் தேதி நெல்லை வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழிச் சாலை ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

தற்கொலை செய்து கொண்ட தினேஷ், தற்கொலைக்கு முன் தனது தந்தைக்கு மனமுடைந்த நிலையில் எழுதிய கடிதத்தில், ``அப்பா.. நான் இறந்த பிறகாவது நீ குடிக்காமல் இரு. நான் இறந்த பிறகு எந்தக் காரியமும் செய்யக் கூடாது. இதன் பிறகாவது குடிக்காமல் இருந்தால்தான் எனது ஆன்மா சாந்தியடையும். நான் இறந்த பிறகாவது நாட்டின் பிரதமர், முதலமைச்சர் ஆகியோர் மதுபானக்கடைகளை அடைக்கிறார்களா என்று பார்ப்போம் இல்லாவிட்டால் ஆவியாக வந்து மதுபானக் கடைகளை ஒழிப்பேன்’’ என்று எழுதப்பட்டிருந்தது. 

 இந்த நிலையில், நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், மாணவன் தினேஷ் நல்லசிவன் எடுத்துள்ள மதிப்பெண் விவரம் தெரியவந்துள்ளது. 

அவர் 1,024 மதிப்பெண் எடுத்துள்ளார். அவர் தமிழ்ப் பாடத்தில் 194 மதிப்பெண் எடுத்துள்ளார். ஆங்கிலத்தில் 148 மதிப்பெண்ணும், இயற்பியலில் 186 மதிப்பெண்ணும் எடுத்துள்ளார். வேதியலில் 173 மதிப்பெண்ணும், உயிரியலில் 129 மதிப்பெண்ணும், கணிதத்தில் 194 மதிப்பெண்ணும் எடுத்துள்ளார். 

பிளஸ்-2 தேர்வை நன்கு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்த நிலையில், தந்தையின் குடிப்பழக்கத்தால் மாணவன் தினேஷ் தற்கொலை செய்துள்ளார். தற்போது, தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அவரது மதிப்பெண்ளை பார்க்கும்போது, எதிர்காலத்தைய கனவு எந்த அளவில் இருந்துள்ளதை தெளிவு படுத்துவதாக அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...