இஸ்லாமியர்கள் புனித கடமையான, ரமலான் நோன்பு இன்று (மே-17) துவங்குவதாக தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.
கோவை : இஸ்லாமியர்கள் புனித கடமையான, ரமலான் நோன்பு இன்று (மே-17) துவங்குவதாக தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் நோன்பு இருக்கும் மாதமான ரமலான் நாளை முதல் தொடங்க உள்ளது. பொதுவாக பிறை பார்த்து தலைமை ஹாஜி அறிவிப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று பிறை தெரிந்ததை அடுத்து இன்று முதல் ரமலான் தொடங்குவதாக தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்றான, ரமலான் நோன்பு, இன்று துவங்குகிறது.
இஸ்லாமிய மாதங்களில் எட்டாவது மாதமான ரமலான் மாதத்தின் ஓர் இரவில் தான் புனித நூலான குர்ஆன் வசனங்கள் இறக்கப்பட்டதாக நம்பிக்கை உண்டு. ஆகவே அந்த மாதம் நோன்பு மாதமாக கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த நோன்பு காலங்களில், 30 நாட்களும் 5 வேலை தொழுகைத்தவிர சிறப்புத் தொழுகையாக தராவிஹ் தொழப்படும். பின்னர், அதிகாலை சூரியன் உதிக்கும் முன்னே சஹர் என அழைக்கப்படும் உணவை உண்டபின் நோன்பு வைக்க துவங்குவார்கள். அதுமுதல் மாலை 6-30 மணி மஹ்ரிப் தொழுகை வரை தண்ணீர் கூட அருந்தாமல் நோன்பிருப்பார்கள். பின்னர் நோன்பை முடித்து உணவருந்துவார்கள். 30 நாட்கள் நோன்பின் முடிவில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.