தேர்வு முடிவுகள் பார்க்க சென்ற மாணவர் மாயம் : பெற்றோர் கண்ணீருடன் புகார்

கோவை : தேர்வு முடிவுகள் வருவதால் காலையிலேயே வீட்டை விட்டு வெளியே போன 12 வகுப்பு பள்ளி மாணவன் மீண்டும் வீடு திரும்பாததால் பெற்றோர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.


கோவை : தேர்வு முடிவுகள் பார்க்க வீட்டை விட்டுச் சென்ற 12-ம் வகுப்பு மாணவன் திரும்பவில்லை என்று அவரது பெற்றோர் கண்ணீர் மல்க மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.






டி.வி.எஸ்., நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் அஸ்வின் பாரிக்கர். சாயிபாபா காலனியில் உள்ள இராமலிங்க செட்டியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தனது மதிப்பெண் பார்க்க அவர் காலையிலேயே வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. 

மாணவரின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, மாநகர காவல் ஆணையாளரிடம் மகனை கண்டுபிடித்து தரக்கோரி கண்ணீர் மல்க புகார் அளித்தனர். 

இது குறித்து மாணவனின் தந்தை கூறுகையில், "எனது மகன் 12-ம் வகுப்பு தேர்வு எழுதியிருப்பார் என்று நினைத்திருந்தோம். ஆனால், இன்று அவரைத் தேடி பள்ளிக்குச் சென்ற போது தான், அவர் தேர்வு எழுதவில்லை என்ற விபரம் தெரியவந்தது. 

பள்ளி நிர்வாகம் முன்னரே என் மகன் தேர்வு எழுதாத தகவலை தந்து இருந்தால், என் மகனை கவனமாக பார்த்திருப்பேன். இப்போது என் மகனைக் காணவில்லை. அவரை போலீசார் மீட்டுக் கொடுக்க வேண்டும்." என்று வேதனையுடன் தெரிவித்தார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...