பிளஸ்-2 பொதுத் தேர்வில் உங்களது குழந்தை குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தால், அவருக்கு ஏற்பட்டுள்ள மனவிரக்தியைப் போக்கி, எதிர்காலத்திற்கு தேவையான பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பெற்றோர்களுக்கு சில கடமைகள் உண்டு.

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள், தனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்குப் பாராட்டுக்கள், எதிர்காலத்தின் திட்டமிடல் என அவரைச் சுற்றி ஒரே மகிழ்ச்சி அலைகளாக வீசிக் கொண்டிருக்கும். அதே வேளையில், குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள், பெற்றோர்களின் சாடல்கள், கோபக் கனைகள் என ஒரே அவமான நிகழ்வுகளை மட்டுமே சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எதிர்காலம் வீணாகிவிட்டதாகக் கருதி அவர்களை கரித்துக் கொட்டும் வேலைகளை முதலில் பெற்றோர்கள் நிறுத்த வேண்டும். அவ்வாறு அவர்களை திட்டுவதால் எந்தப் பலனும் இல்லை என்பதை புரிந்து, தங்களது குழந்தைகளுக்கு ஊக்கத்தைக் கொடுக்க வேண்டும்.
குறைந்த மதிப்பெண் பெற்றவர்களின் பெற்றோர்களுக்கு சில அறிவுரைகள் :-

- குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை திட்டுவதால், அவர்கள் சேரப்போகும் கல்லூரிகளில் கூடுதல் மதிப்பெண்கள் கொடுப்பார்களா..? என்பதை சிந்தியுங்கள். மனவிரக்தியால் இருப்பவரை மீட்டு, அவரது எதிர்காலத்தை நிர்ணயிப்பவராக இருக்க வேண்டும்.
- பள்ளிப் படிப்பை பூர்த்தி செய்யாமல் தற்போது சமுதாயத்தில் உயர்ந்திருக்கும் பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரபலங்களை உதாரணமாக எடுத்துக் கூறி, அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட அறிவுறுத்துங்கள்.
- குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் தகராறுகள் ஏற்படலாம். இதனை தவிர்க்கவில்லை எனில், குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவர்கள் தங்களது எதிர்காலத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான நம்பிக்கையையும் இழப்பார்கள். எனவே, சிந்தித்து செயல்பட வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு உண்டு.
- மதிப்பெண்களாலும், புத்தகங்களினாலும் மட்டுமே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறதா..? என்பதைப் பெற்றோர்கள் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். பின்னர், இது போன்ற தோற்றங்களில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும். மாணவர்களை அவர்களது வழியிலேயே விட்டு விட வேண்டும். மாணவர்கள் தற்போது இளைஞர்களாக மாறி வருவதால், அவர்களது வாழ்க்கையை சொந்தக் காலில் நிற்க கற்றுக் கொடுக்க வேண்டும்.