திருப்பூரில் கட்டிட வேலையின் போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளர்கள் பலி

திருப்பூர்: திருப்பூரில் கட்டிட வேலையின் போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் கட்டிட வேலையின் போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாமுண்டிபுரம் பகுதியில் பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான மூன்று மாடி கட்டிட வேலை நடைபெற்று வருகிறது. கட்டிட பணி முடிவுற்ற நிலையில் சுவர்களுக்கு வண்ணம் அடிக்கும் பணி இன்று நடைபெற்று வந்தது. இதில் ராஜாமணி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் ராஜா ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.

ராஜாமணி மற்றும் கிருஷ்ண மூர்த்தி இருவரும் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் வேலை செய்து வந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி, அளவுகோலை கொண்டு மாடியில் அளவிடும் பணியில் ஈடுபட்டார். அப்போது, அளவுகோல், எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின்சாரக் கம்பியின் மீது மோதியது. இதில், கிருஷ்ணமூர்த்தி மீது மின்சாரம் பாய்ந்தது.

அவரை காப்பாற்ற முற்பட்ட ராஜாமணி மீதும் மின்சாரம் பாய்ந்து. இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...