கோவை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானதைத் தொடர்ந்து கோவையில் பள்ளி மாணவிகள் இருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கோவை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானதைத் தொடர்ந்து கோவையில் பள்ளி மாணவிகள் இருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் ஜெயலட்சுமி . இவரது மகள் 12 வகுப்பு தேர்வு எழுதியுள்ள நிலையில் இன்று முடிவுகள் வெளியானது. தேர்வில் அவர் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து தனது வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்தார். மகள் தற்கொலைக்கு முயன்றதைப் பார்த்த அவரது தாய் உடனடியாக அவரை மீட்டார். மாணவிக்கு கை முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதே போல சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த வசந்த் பாபுவின் மகள் தனியார் பயிற்சி மையத்தின் மூலம் 12-ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். இன்றைக்கு வெளியான தேர்வு முடிவில் தோல்வியடைந்ததை அடுத்து வீட்டில் இருந்து பெனாயிலை குடித்தார். இதையறிந்த அவரது அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

பிளஸ் 2 முடிவுகளால் இரண்டு மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.