கோவை : வெளியாகியுள்ள பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் அடிப்படியில் கோவை மாவட்டத்தில் 95.48 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கோவை : வெளியாகியுள்ள பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் அடிப்படியில் கோவை மாவட்டத்தில் 95.48 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் கோவை மாவட்டத்தில் 95.48 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதத்தில் கடந்தாண்டு 10-வது இடத்தில் இருந்த கோவை மாவட்டம் தற்போது 8-வது இடத்தை கோவை மாவட்டம் பிடித்துள்ளது.
கோவையைப் பொறுத்தவரையில் மொத்தம் 347 பள்ளிகள் நடைபெற்ற தேர்வினை, 36,454 பேர் எழுதினர். அதில், 34,805 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 15,066 பேரும், மாணவிகள் 19,739 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, மாணவர்கள் 93.62 சதவீதமும், மாணவிகள் 96.95 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வித்தியாசம்
கடந்த ஆண்டு 95.83 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு 95.48 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டை காட்டிலும் 0.35 சதவீதம் குறைவு.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கூறுகையில், "மாற்றுத் திறனாளி மாணவர்கள் எழுதிய தேர்வில் 93.3 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பார்வையற்ற மாணவர்கள் 13 பேர் தேர்வு எழுதிய நிலையில் அனைவருமே தேர்சியடைந்தனர். இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்." என்றார்.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெ. அய்யண்ணன் கூறுகையில், "கோவையில் 34 பேர் 1,180 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கியுள்ளனர். இதே போல், 1,151 முதல் 1,180 மதிப்பெண்கள் வரை 611 பேர் பெற்றுள்ளனர். 1,126 முதல் 1,150 மதிப்பெண் வரை 814 பேரும், 1,101 முதல் 1125 மதிப்பெண் வரை 1,018 பேரும், 1,001 முதல் 1,100 மதிப்பெண் வரை 5332 பேரும் பெற்றுள்ளனர். 7,500 பேர் ஆயிரத்திற்கு மேல் மதிப்பென் பெற்றுள்ளனர்." என்றார்.