கோவை : வாகன விபத்து ஏற்படுத்தி மரத்தை சாய்த்த நபருக்கு கோவை மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

இதுவரை உரிய அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வந்தனர். ஆனால் முதன் முறையாக கோவை நீதிமன்ற வளாகத்தின் அருகே இருந்த மரம் ஒன்றின் மீது லாரியை மோதி விபத்து ஏற்படுத்தியவருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
இது குறித்து ஓசை அமைப்பைச் சேர்ந்த சையது கூறுகையில், "நேற்று மாலை 'மே-பிளவர்' என்ற 20 வயது மதிக்கத்தக்க மரம் லாரி மோதி விழுந்தது. இது குறித்து நீதிமன்ற வளாக ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் அந்த லாரி ஓட்டுனரை பிடித்தனர். மேலும், வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு அபராதம் விதிக்க முடிவு செய்த அதிகாரிகள், எவ்வளவு அபராதம் விதிக்கலாம்? என்பதை இன்று தெரிவிக்கவுள்ளனர்.
இதுவரை உரிய அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வந்த அதிகாரிகள் முதன் முறையாக விபத்து மூலம் மரத்தை சாய்த்தவருக்கு அபராதம் விதிக்கின்றனர்." என்றார்.