சென்னை : தற்போது வெளியாகியுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தமிழகத்தில் தேர்ச்சி 91.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் குறைவு.
சென்னை : தற்போது வெளியாகியுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தமிழகத்தில் தேர்ச்சி 91.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் குறைவு.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினர். அனைவரும் தேர்வு எழுதும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 942 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனித் தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினர்.
முடிவு
இந்தத் தேர்வுக்கான முடிவுகளை இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கேஏ .செங்கோட்டையன் வெளியிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேர்வு முடிவுகள் குறித்த தகவல்களை வெளியிட்டார். அதன் விவரங்கள் பின்வருமாறு :-
* தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
* மாணவிகள் 94.1 சதவீதம், மாணவர்கள் 87.7 சதவீதம்.
* வழக்கம் போல் மாணவிகளே தேர்ச்சி விகிதம் அதிகம் பெற்றுள்ளனர்.
* கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
* 97 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.
* 96.3 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடம்,
* 96.1 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் மூன்றாவது இடம்