பறை இசை பயிற்சி பட்டறையில் இசைக்கேற்ப நடனமாடி அசத்திய மாணவர்கள்

கோவை: கோவையில் கிராமிய இசை மற்றும் வீதி நாடகப் பயிற்சி பட்டறை வகுப்பில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், இசைக்கேற்ப நடனமாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.

கோவை: கோவையில் கிராமிய இசை மற்றும் வீதி நாடகப் பயிற்சி பட்டறை வகுப்பில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், இசைக்கேற்ப நடனமாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.



சி.எஸ்.ஐ கோவை மண்டல தொடர்பியல் துறை சார்பில் கிராமிய இசை மற்றும் வீதி நாடகப் பயிற்சி பட்டறை வகுப்புகள் அவிநாசி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ எஸ்.டி.சி அரங்கில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்தப் பயிற்சி பட்டறையில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர்.



இது குறித்து தொடர்பியல் துறை இயக்குனர் அருட்தந்தை கிருஸ்டோபர் கூறுகையில், "பறை இசை குறித்து தவறான கண்ணோட்டம் நிலவி வருகிறது. இது கிராமிய கலைகளில் ஒன்றானது. இந்த கலையை வளர்க்கும் நோக்கில் இந்தப் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டு வருகிறது. அழிந்து வரும் இந்தக் கலையை மீட்டெடுக்கும் முயற்சிதான் இது. தொடர்பியல் துறை சார்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக தலித் கலை விழா, கீர்த்தனை பெரு விழா என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வரும் எழுத்தாளர் திருச்சி பிரபாகரன் மற்றும் விடியல் அமைப்பு சமூக ஆர்வலர் பிரபாகர் கூறியதாவது :- இந்த இசை பயிற்சியில் மாணவர்களுக்கு மனரீதியாகத் தயாராகுதல், இசைக்கேற்ப உடல்மொழி கற்றுத் தரப்படுகிறது. மறைந்து வரும் கலையை திரும்பக் கொண்டு வரும் நோக்கிலேயே இந்தப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது, என்றார்.



இந்தப் பட்டறையில் பங்கேற்றுள்ள கல்லூரி மாணவியான செபெல்லா எஸ்தர் கூறும்போது :- வடகத்திய கலாச்சாரம் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழர்களின் பாரம்பரிய கலையை கற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம், மக்களிடையே உள்ள ஏற்றத் தாழ்வு, மனப்பான்மையை போக்கவும், இதை மக்களிடையே எடுத்து செல்ல இந்தப் பறை பயிற்சி அமைந்துள்ளது, எனக் கூறினார்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...