திருப்பூர் : திருப்பூரில் சாலையில் எரிந்த நிலையில் கிடந்த ஆணின் கால் பகுதி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வளம் பாலம் கே.பி.என்., காலனி மின்மயானம் அருகே நொய்யல் ஆற்றையொட்டி சென்ற தெருநாய் ஒன்று, மனித கால் ஒன்றை வாயில் கவ்வியபடி ஓடியது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இந்த சம்பவத்தை கண்டு மிரண்டனர். திடீரென சாலை ஓரத்தில் காலை போட்டு விட்டு நாய் ஓடி விட்டது. இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, துணி சுற்றிய நிலையில் கிடந்த கால் பகுதி, ஆணுடையது என்பது முதல்கட்டமாக தெரிய வந்தது.
இடது கால்பகுதி பாதி எரிந்த நிலையில், மீதி ஒரு பாகம் கொஞ்சம் தள்ளி கிடந்தது. காலில் கத்தரிக்கோல், மருத்துவமனையில் காயத்துக்கு கட்டப்படும் துணி சுற்றியிருந்தது. இதனால், ஏதாவது, மருத்துவமனை ஒன்றில் சர்க்கரை போன்ற நோயால் அகற்றப்பட்ட கால் தூக்கி வீசப்பட்டதா..? அல்லது கொலை செய்யப்பட்டுள்ளதா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனா்.