கோவை : இந்திய வரைபடத்தில் 3,000 வண்ணநிற பந்துகளை 40 நிமிடங்களில் நிரப்பி சாதனை படைத்த கோவையைச் சேர்ந்த மழலையர்களுக்கு ஜெட்லி புக் ஆப் ரெகார்டு விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.
கோவை : இந்திய வரைபடத்தில் 3,000 வண்ணநிற பந்துகளை 40 நிமிடங்களில் நிரப்பி சாதனை படைத்த கோவையைச் சேர்ந்த மழலையர்களுக்கு ஜெட்லி புக் ஆப் ரெகார்டு விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.
திருச்சியில் உலக சாதனை 2018-க்கான நிகழ்வு கடந்த 1-ம் தேதி நடைபெற்றது. அதில், ஜெட்லீ புக் ஆப் ரெக்கார்டுக்காக கோவை அவானி பப்ளிக் பள்ளியில் யூ.கே.ஜி., படிக்கும் யஷ்ஸஸ்வினி இந்திய வரைபடத்தில் 3,000 வண்ணநிற பந்துகளை (10*6 feet) 29 நிமிடங்களில் நிரப்பி சாதனை படைத்துள்ளார். அதே பள்ளியில், படிக்கும் சம்யுக்தா என்பவர் 'குழந்தையை காப்போம்' என்ற தலைப்பில் தனது வலது கை அச்சினை 30 அடி நீலம் உள்ள துணியில் 40 நிமிடங்களில் முடித்து சாதனை படைத்தார்.

இந்த நிலையில், இந்த இரு குழந்தைகளையும் கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் நேரில் அழைத்து பாராட்டினார். இதேபோல, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர்.அசோகன், குழந்தைகளை கவுரவித்தார்.