திருப்பூர் : திருப்பூரில் தனியார் உணவக மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் உயிரிழந்தார்.
திருப்பூர் : திருப்பூரில் தனியார் உணவக மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் சாம் என்பவர் அமிர்தம் என்ற உணவகம் நடத்திவருகிறார். கடந்த வாரம் பெய்த தொடர் கனமழை காரணமாக அந்த உணவகத்தின் கான்கிரீட் கூரை நேற்று மாலை திடீரென சரிந்து விழுந்தது. அப்போது அங்கு உணவு வாங்கச் சென்ற சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சரவஸ்வதி (22) என்ற பெண் இடிபாடுகளில் சிக்கி பலியானார். மேலும், உளுந்தூர் பேட்டை பகுதியை சேர்ந்த பிரியா (21), ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுனிதா (22) ஆகியோர் லேசான காயமடைந்தனர்.
அவர்களை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து அவினாசி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பொதுமக்கள் அதிக நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில் ஏற்பட்ட விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனால் கோவை & ஈரோடு சாலையில் சுமார் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.