இளையராஜா பாடல்களை உரிய அனுமதியின்றி வெளியிட்டு வரும் கோவையைச் சேர்ந்த நிறுவனம் மீது புகார்

கோவை: இளையராஜா இசையமைத்த பாடல்களை உரிய அனுமதியின்றி சி.டி.க்களாக வெளியிட்டு வரும் தனியார் இசை தட்டு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை: இளையராஜா இசையமைத்த பாடல்களை உரிய அனுமதியின்றி சி.டி.க்களாக வெளியிட்டு வரும் தனியார் இசை தட்டு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை ஆடீஸ் வீதியில் "ஹனி பீ மியூசிக்" என்ற இசைதட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு, இளையராஜாவின் இசை மற்றும் பாடல்களை சி.டி.யாகவும், இணையதளத்திலும் எந்தவித அனுமதியுமின்றி வெளியிடுவதாகக் கூறப்படுகிறது. மேலும், வேறு, வேறு இசைகளை ,இளையராஜாவின் இசையுடன் புகுத்தி (DTS format) வெளியிட்டு வருவதாகவும், இதனால், இசை உலகில் இளையராஜாவிற்கு உள்ள நற்பெயர் கெட்டு வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில், இளையராஜாவின் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவசாமி தமிழன், தனியார் இசைத்தட்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில், கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள இசைத்தட்டுகளை பறிமுதல் செய்ய வேண்டும். உரிய அனுமதியின்றி சட்டத்திற்கு முரணாக சி.டி. வெளியிட்டு சம்பாதித்த பணத்தை வைத்திருக்கும் அந்நிறுவன உரிமையாளர்கள் வங்கிக் கணக்கையும், அந்நிறுவன அந்நிறுவன வங்கிக் கணக்கையும் முடக்க வேண்டும். இளையராஜா பெயரைப் பயன்படுத்தி சம்பாதித்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதோடு, உரிமையாளர் அந்தோணி முத்துசாமியையும் கைது செய்ய வேண்டும், இவ்வாறு அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...