கோவை: கோவை மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை தடுக்கும் வகையில், 'கொங்குநீர்' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கொங்கு குளோபல் ஃபார்ம் மற்றும் சிறுதுளி அமைப்பு இணைந்து மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து நொய்யல் வாழ்வு மையத்தில் சிறப்பு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், கர்நாடக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணையத்தைச் சேர்ந்த ஏ.ஆர். சிவக்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்பின் தலைவர்கள், கொங்கு குளோபல் ஃபார்மின் தலைவர் சக்திவேல், சிறுதுளி அமைப்பின் நிர்வாக இயக்குநர் வனிதா மோகன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் அவசியம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இதனிடையே, 'கொங்குநீர்' திட்டத்தின் கீழ், கொங்கு மண்டலத்திற்குட்பட்ட 7 மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்படும் என கொங்கு குளோபல் ஃபார்மின் தலைவர் சக்திவேல் தெரிவித்தார். மேலும், பொது - தனியார் கூட்டுத் திட்டத்தை, மத்திய, மாநில அரசுகள் திறம்பட செயல்படுத்தப்படுவதாகக் கூறினார்.

கர்நாடகாவில் 22,380 பள்ளிகளிலும், பெங்களூரூவில் 700 பூங்காக்களில் 300 தனியார் நிறுவனங்களின் ஆதரவுடன் மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.