பயணிகளின் கோடை தாகத்தை போக்கும் அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் : பயணிகள் நிம்மதி

தஞ்சாவூர் அருகே பயணிகளின் கோடை தாகத்தைப் போக்கும் வகையில், ஓட்டுநரும், நடத்துநரும் இணைந்து நகர அரசுப் பேருந்தில் குடிநீர் கேன் அமைத்து தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் அருகே பயணிகளின் கோடை தாகத்தைப் போக்கும் வகையில், ஓட்டுநரும், நடத்துநரும் இணைந்து நகர அரசுப் பேருந்தில் குடிநீர் கேன் அமைத்து தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். 

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியிலிருந்து கல்லணைக்கு ஒருமுறையும், மற்ற நேரங்களில் செங்கிப்பட்டியிலிருந்து திருக்காட்டுப்பள்ளி வழியாகச் சுரக்குப்பட்டி என்ற ஊருக்கும் 88 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்தில் ஓட்டுநராக செல்வராஜும், நடத்துநராக முத்தமிழ் செல்வனும் பணியாற்றி வருகின்றனர். கோடைக் காலம் தொடங்கியுள்ளதால், நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்து பயணிகள் பேருந்தை பிடிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால், பயணிகளின் தாகத்தைப் போக்க அப்பேருந்தின் ஓட்டுநரும், நடத்துநரும் இணைந்து புதிய முயற்சியை மேற்கொண்டனர். 

அதன்படி, அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று, பேருந்திற்குள் தண்ணீர் கேனை பொருத்தியுள்ளனர். இதில், பேருந்தில் ஏறும் அனைத்துப் பயணிகளும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், "தினமும் நாங்கள் பணிக்கு வரும்போது வாட்டர் பாட்டிலில் எங்களின் தேவைக்காகத் தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்வோம். இப்போது, கடுமையான வெயில் வாட்டுகிறது. ஒரு நடைக்கு குறைந்தது 1.30 மணி நேரத்துக்கு மேல் பல குக்கிராமங்கள் வழியாக எங்கள் பேருந்து செல்லும். எல்லா கிராமத்தைச் சேர்ந்த அடித்தட்டு மக்களும் அரசுப் பேருந்தில் பயணிப்பார்கள். அவர்கள் எல்லாம் காசு கொடுத்து தண்ணீர் வாங்கிக் குடிக்க முடியாது. பேருந்து சென்றுகொண்டிருக்கும்போது இடையில் நிறுத்தி தண்ணீர் பாட்டில் வாங்கவும் முடியாது.

அப்போதுதான் எங்களுக்கு இந்த யோசனை வந்தது. எல்லோரும் தண்ணீர் குடிக்கும் வகையில் பேருந்திலேயே தண்ணீர் வைக்க முடிவு செய்தோம். இருவரும் எங்கள் துறை அதிகாரியிடம் உரிய அனுமதி பெற்று பயணிகள் குடிக்க தண்ணீர் வைத்து வருகிறோம்," என்றனர்.

ஒரு மாதத்திற்கும் மேலாகப் பயணிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்துள்ளனர். கோடை காலம் மட்டும் இல்லாமல் எப்போதும் குடிப்பதற்கு தண்ணீர் வைப்பதற்கு அவர்கள் முடிவு செய்துள்ளனர். அரசுப் பேருந்து ஊழியர்களின் மனிதாபிமான செயல் பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...