திருப்பூர் : திருப்பூரில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு காற்றடைத்த நொறுக்கு தீனிகளை தவிர்க்க உணவு பாதுகாப்புத் துறையினர் அறிவுறுத்தினர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யப்படுவது குறித்த பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யப்பட்டிருந்தால் அதனை எவ்வாறு கண்டறிவது? என்பது குறித்த எளிய செய்முறை விளக்கங்களை பொதுமக்களுக்கு செய்து காட்டினர்.

மேலும், குழந்தைகள் அதிக அளவில் வாங்கி உண்ணக் கூடிய காற்றடைத்து பாக்கெட் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் நிறம் சேர்க்கப்பட்ட பொருட்களைத் தவிர்த்து, கடலை மிட்டாய் போன்ற எளிய சத்தான பொருட்களை சிறுவர்களுக்கு தருமாறு பெற்றோரிடம் அறிவுறுத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கலப்பட பொருட்களை நிறங்களைக் கொண்டு எவ்வாறு கண்டறிவது? என்பது குறித்து உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டது.