தேனி: தமிழகத்தைச் சேர்ந்த வீரமங்கை அண்ணபூரணி இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதற்கு தேர்வாகி பெருமை சேர்த்துள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணபூரணி. இவர், இந்தியா ராணுவத்தில் சேர்வதற்கு பல முறை முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில், பெங்களூரூவில் ராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் இந்திய சேவைகள் தேர்வு வாரியத்தில் தேர்வு எழுதினார். உலகில் 2-வது கடினமான விதிமுறைகளைக் கொண்ட இந்தப் பயிற்சி மையத்தில், வீரர்களுடன் சேர்ந்து, அவர்களுக்கு இணையான பயிற்சிகளைப் பெற்றார். ஏழைக் குடும்பத்தை பின்னணியாகக் கொண்ட வீரமங்கை அண்ணபூரணி, முதல் தரத்தில் தேர்ச்சி பெற்றதுடன், ராணுவ அதிகாரியாகவும் உயர்வு பெற்றார்.

தமிழகத்தில் இருந்து பல பெண்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக தேர்வாகியுள்ளனர். யாரும் பெரிய அளவிலான முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருந்து விடுகின்றனர். ஆனால், இதனை உடைத்தெறிந்து ஆன்டிப்பட்டியில் இருந்து இந்திய ராணுவத்தில் கமாண்டராக வீரத்தமிழச்சி அன்னபூரணி தேர்வாகியுள்ளார்.
ஏற்கனவே, போபால் மற்றும் அலகாபாத்தில் நடைபெற்ற இரண்டு தேர்வுகளில் தோல்வியடைந்த அவர், தனது பெற்றோர்களின் ஆதரவாலும், ஊக்கத்தாலும் 3-வது முறையாக தேர்வு எழுதி, ராணுவத்திற்கு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். அந்த வீரமங்கைக்கு நமது சல்யூட்..!