புதுப்பொலிவு பெறுமா கூடலூர் ஊசி மலை சுற்றுலாத்தலம்?

நீலகிரி : கூடலூரில் உள்ள ஊசி மலை சுற்றுலாத்தலத்தை அரசு முறையாக பராமரிக்காத காரணத்தால் பொலிவிழந்து காணப்படுகிறது.

நீலகிரி : கூடலூரில் உள்ள ஊசி மலை சுற்றுலாத்தலத்தை அரசு முறையாக பராமரிக்காத காரணத்தால் பொலிவிழந்து காணப்படுகிறது. 



நீலகிரி மாவட்டம் கூடலூரில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் ஊசி மலை என்ற இரு பிரதான சுற்றுலாத்தலங்கள் உள்ளன. இதில், முதுமலை புலிகள் காப்பகம் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் இங்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். 

வளர்ப்பு யானைகள் முகாம், யானை சவாரி, வாகன சவாரி என்று சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் அம்சங்கள் முதுமலையில் ஏராளம். இதன் காரணமாக முதுமலை மற்றும் அதையொட்டியுள்ள மசினகுடி போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் எப்போதும் அலைமோதுகிறது.



ஊசி மலை 

கூடலூர் - உதகை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஊசி மலை. வனத்தை ஒட்டியுள்ள இந்த காட்சி முனையில் இருந்து கூடலூர் பகுதியை பறவையின் பார்வையில் கண்டு ரசிக்கலாம். வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சுற்றுலாத்தலம் தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. 



மலையின் உச்சியில் உள்ள காட்சி முனைக்கு செல்லும் பாதை 'கரணம் தப்பினால் மரணம்' என்பதைப் போல ஆபத்தானது. சற்றும் அசந்தால் பள்ளத்தில் விழும் நிலை உள்ளது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அந்த பாதையின் இரு புறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டன. ஆனால், தடுப்புகள் தற்போது உடைந்து சேதமடைந்து காணப்படுகின்றன. தடுப்புகள் இல்லாமல், பாதுகாப்பற்ற நிலையிலேயே சுற்றுலா பயணிகள் நடமாடுகின்றனர். 



மேலும், காட்சி முனையில் சிலர் அருவருக்கத்தக்க முறையில் கிறுக்கிச் சென்றுள்ளனர். இது அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது. மேலும், நுழைவு வாயிலில் உள்ள காவலர் அறையை பல முறை யானைகள் சேதப்படுத்தியுள்ளன. யானைகள் நடமாட்டம் காரணமாக மாலை 5 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை.



"நிதி ஆதாரம் கிடைத்தவுடன் ஊசி மலையில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று வனத்துறையினர் விளக்கமளிக்கின்றனர். ஆனால், ஊசி மலை வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளதால், இப்பகுதியை சுற்றுலாத் துறை கண்டு கொள்வதில்லை என்று புகார் எழுந்துள்ளது. கோடை சீசன் தொடங்கிய இந்த நிலையில், ஊசி மலையை அரசு நல்ல முறையில் பராமரித்து சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...