மூன்றாவது நாளாக தொடரும் நீலகிரி தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் போராட்டம்

நீலகிரி: பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நீலகிரி அரசு தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி: பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நீலகிரி அரசு தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

நீலகிரி மாவட்டத்தில் அரசு தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமாக அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேறி பூங்கா உட்பட 5 பூங்காக்கள், 9 பண்ணைகள் உள்ளன. இங்கு பல ஆண்டுகளாக தினக் கூலி அடிப்படையில் பணிபுரியும் 463 தற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வாராந்திர விடுமுறை நாட்களில் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்  நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. 



இந்த நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக தொழிலாளர்கள் அனைவரும் பணிக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

தொடர்ந்து, இன்று அரசு தாவரவியல் பூங்காவின் முகப்பு பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...