எர்ணாகுளம்: நீட் தேர்வு எழுதுவதற்காக மகனை கேரளா அழைத்துச் சென்ற தந்தை மரணமடைந்த சம்பவம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எர்ணாகுளம்: நீட் தேர்வு எழுதுவதற்காக மகனை கேரளா அழைத்துச் சென்ற தந்தை மரணமடைந்த சம்பவம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்துறைத்துறை பூண்டியைச் சேர்ந்தவர் கஸ்தூரி மகாலிங்கம். நீட் தேர்வு எழுதுவதற்காக இவருக்கு கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், கஸ்தூரி மகாலிங்கம் தனது தந்தை கிருஷ்ணசாமியுடன் கேரளா சென்றார். இன்று அவர் தேர்வு எழுதச் சென்றிருந்த நிலையில், கிருஷ்ணசாமி-க்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தனத்தை உயிரிழந்தது தெரியாமல் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வை எழுதினார். தமிழக மாணவர்களுக்கு மட்டும் கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, சிக்கிம் என 2,000 கிமீ தொலைவுக்கு அப்பால் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது பெரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், மகனை தேர்வுக்கு அழைத்துச் சென்ற தனத்தை உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களை கொதிப்படையச் செய்துள்ளது.