புரோ கபடி விதிமுறைகளின் அடிப்படையில் 2 நாள் சேம்பியன்சிப் போட்டிகள் தொடக்கம்

தமிழகத்திலேயே முதல் முறையாக புரோ கபடி விதிமுறைகளைப் பின்பற்றி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் 2 நாள் சேம்பியன்சிப் போட்டிகள் திருப்பூரில் தொடங்கியது.

தமிழகத்திலேயே முதல் முறையாக புரோ கபடி விதிமுறைகளைப் பின்பற்றி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் 2 நாள் சேம்பியன்சிப் போட்டிகள் திருப்பூரில் தொடங்கியது. 



தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டிகள் இளைஞர்கள் மத்தியில் பிரசித்தி பெற்றதாகும். தற்போது, கபடி விளையாட்டில் புதிய விதிமுறைகளைப் பின்பற்றி புரோ கபடி போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் புதிய விதிமுறைகளின்படி, உள்விளையாட்டு அரங்கில் ரப்பர் மேட் அமைத்து, அதில் வீரர்கள் விளையாடவேண்டும். மேலும், வீரர்கள் காலில் ஸ்போர்ட்ஸ் காலணி அணிந்து விளையாடவேண்டும் என்பது போன்ற புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, திருப்பூரில் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் 2 நாள் சேம்பியன்சிப் கபடி போட்டிகள் தனியார் திருமண மண்டப உள்அரங்கில் இன்று தொடங்கியது. புரோ கபடி விதிமுறையின்படி முதன் முறையாக தமிழகத்திலேயே திருப்பூரில் நடத்தப்பட்ட இப்போட்டிகளை மாநகர காவல் ஆணையர் நாகராஜ் தொடங்கி வைத்தார். பின்னர், நடைபெற்ற போட்டிகளில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆண்கள் பிரிவில் 50 அணிகளும், பெண்கள் பிரிவில் 15 அணிகளும் சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் கலந்துகொண்டன. நாளை மாலை வரை நடைபெறும் இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்குப் பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...