பழங்காலத்தில் வானிலை ஆய்வு மையமாக இருந்த ராபின் பறவையும், மின்மினிப் பூச்சியும்...!

கோவை: தொழில்நுட்ப வசதிகள் கைதேர்ந்த நிலையிலும் கூட வானிலை ஆய்வு மைய கணிப்புகள் பொய்த்துப் போகின்ற இந்தக் காலக்கட்டத்தில், தொன்று தொட்ட காலங்களில் தென்மேற்கு பருவ மழையை துல்லியமாக கணித்த அதிசயங்கள் ஆராய்ச்சியாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

கோவை:: தொழில்நுட்ப வசதிகள் கைதேர்ந்த நிலையிலும் கூட வானிலை ஆய்வு மைய கணிப்புகள் பொய்த்துப் போகின்ற இந்தக் காலக்கட்டத்தில், தொன்று தொட்ட காலங்களில் தென்மேற்கு பருவ மழையை துல்லியமாக கணித்த அதிசயங்கள் ஆராய்ச்சியாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.  

பிரபஞ்சமும்.. மேற்கு தொடர்ச்சி மலைகளும்..

நாம் வாழும் பூமி உட்பட நம்முடைய சூரிய குடும்பம், கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கும் முன்பு தோன்றியது. பூமி தோன்றி 460 கோடி ஆண்டுகள் ஆகிறது. பாரதத்தின் தெற்கு கன்னியாகுமாரி முதல் குஜராத் வரை 1,575 கி.மீ. ஆறு மாநிலங்களின் ஊடாக நீண்டு கிடக்கும் மிகப் பழமையான மலைத்தொடர் மேற்குத் தொடர்ச்சி மலைகள். 

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வயது சுமார் 5 கோடி ஆண்டுகள் என்பதுதான் அறிவியலாளர்களின் கருத்து. இந்த மலைத்தொடரை சர்வதேச அமைப்பான UNESCO - World Heritage Site என அறிவித்துள்ளது. 

"endemic " என்று சொல்லப்படும் வேறு எங்கும் காணக் கிடைக்காத இங்கு மட்டுமே உள்ள உயிரினங்கள் செடி, கொடி தாவர இனங்கள் உள்ள பூமியின் இயற்கையான அரிய இடங்களில் ஒன்று மேற்குத் தொடர்ச்சி மலை. தென் இந்தியாவிலேயே மிக உயரமான மலைச் சிகரம் ஆனைமுடி. மேற்குத் தொடர்ச்சி மலைகளிலேயே மிக உயரமான இடமும் இதுதான்.  

ராபின் பறவை 

"நிசப்த வசந்தம்" (SILENT SPRING)  ரேச்சல் கார்சன் என்ற பெண் எழுத்தாளர் 1962 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட இந்த புத்தகம் உலகின் மிக முக்கியமான இருபது புத்தகங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட ஒரு மிகச் சிறந்த ஆராய்ச்சி முடிவு ராபின் பறவை என்றொரு சிறிய வகை பறவை. ஒவ்வொரு ஆண்டும் அந்தப் பறவையின் வரவு, இருத்தல், நிலை நிற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே ஐரோப்பாவின் இரண்டு நாடுகளின் காலநிலை அமைந்திருக்கும் என்ற சர்வ துல்லியமான கண்டுபிடிப்பு நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. 



மின்மினிப் பூச்சிகள் 

அது போலவே, நம்முடைய மேற்குத் தொடர்ச்சி மலை - பாலக்காட்டு கணவாய் தெற்கு, நெல்லியாம்பாதி - பரம்பிக்குளம் - அதிரப்பள்ளி ஆகிய பசுமை காடுகளில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே வரை விவரிக்க முடியாத இயற்கையின் தெய்வீகமான ஒரு மிகச் சிறந்த நிகழ்வு நடந்து கொண்டிருக்கின்றது. இந்தக் காலக்கட்டங்களில், ஒவ்வொரு நாளும் மாலை இருள் சூழ்ந்தது முதல் அதிகாலை சூரியன் வரும் வரை காடு முழுவதும் சீரியல் ஒளி விளக்குகளை அலங்காரம் செய்தது போல மின்மினிப் பூச்சிகள் முட்டையிடும் தெய்வீகமான நிகழ்வு நடக்கும். 

நெல்லியாம்பாதி பாடகிரியில் இருந்து காரப்பாரை, விக்டோரியா செல்லும் வழியிலும், கைகாட்டி என்ற இடத்தில் இருந்து மாண்பாறை செல்லும் வழி நெடுகில் உள்பட நெல்லியாம்பாதி பிரதேசங்களின் வனப்பகுதிகள் முழுவதுமே இந்த அபூர்வமான ஆச்சரியப்பட வைக்கும் நிகழ்வை காண முடியும். கடந்த 11 ஆண்டுகளாக சர்வ துல்லியமாக ஒவ்வொரு ஆண்டும் நாட்கள் கணித்து கடந்த மிகக் கூர்மையாக கவனித்து வந்தோம். ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில் இருந்ததை விட தற்போது குறைவுதான். தென் மேற்குப் பருவ மழை ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கடைசி வாரத்தில் அரபிக்கடலில் இருந்து காற்றடிக்கும். ஜூன் முதல் தேதியில் மிகத் துல்லியமாக மழை பெய்திருக்கும். 

அப்படிப்பட்ட பாரம்பரியமான மழை பெய்வதற்கான தென் மேற்குப் பருவக் காற்று, தற்போது இல்லாமல் போயுள்ளது. அப்படியே, காற்றாடித்தாலும் அதன் வேகம் முன்பைப் போல இல்லாமல் உள்ளது. மேலும், தென் கிழக்கு, ஆசிய நாடுகளின் மொத்த காலநிலை மாற்றங்களும் சேர்ந்துள்ளதால், பருவமழை காலம் தவறி மிகமிகக் குறைவாக கிடைக்கின்றது. வரும் மே கடைசி வாரம் காற்றடித்து ஜூன் முதலில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவ மழை, எப்படி இருக்கும் என்பதை ஓரளவுக்கு இப்போதே உணர முடிகின்றது.

மின்மினிப் பூச்சிகளின் வருகை, இருத்தல் அடிப்படையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் எதிர்பாராதவிதமாக கிடைத்த காற்றழுத்தத் தாழ்வு மண்டல நிகழ்வு, மழை அனைத்தையும் ஒப்பிடுகையில், தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதக் கடைசி கூட ஆகலாம். இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை நமக்கு கிடைக்க, ஒவ்வொரு ஆண்டும் எந்த நாளில் மின்மினிப் பூச்சிகள் வருகின்றன, எத்தனை நாட்கள் நிலை நிற்கின்றன, எந்தெந்த நாட்களில் மிக அதிகமாக உள்ளன என்பவையெல்லாம் மழை நாட்கள், மிக பலமான மழை நாட்கள், மிதமான மழை நாட்கள் ஆகியவைகளுடன் மிகத் துல்லியமான தொடர்புடையவை. 

தற்போதைக்கு எப்படியானாலும் ஜூலை மாதமாவது கிடைக்கப் போகும் மழையை சேமிக்க, நம் நிலப்பரப்பின் நிலத்தடி நீரை அதிகரிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும். இனி நாம் பணி தொடங்குவோம், மிகத் துல்லியமான பாதையில். இயற்கையை உணர்ந்த மாமனிதர்களான விவசாயிகளின் தொடர்புகள், அனுபவங்களின் பகிர்தல்கள் என அத்தனையும் சேர்ந்தே இப்போது நம் நிலப்பரப்பின் காலநிலை நிகழ்வுகளை ஓரளவுக்கு மேல் சொல்ல முடிகின்றது. 

முன்காலங்களில் எல்லாம் தென்மேற்கு வானம் கருத்திருந்தால் பெரியவர்கள் மழையின் நேரத்தையும், இடத்தையும் மிகத் துல்லியமாக சொல்வார்கள். அவர்களெல்லாம் எந்தப் பல்கலைக்கழகத்திலும் வானியல் பட்டம் பெற்றிருக்கவில்லை. அந்த அறிவை நாம் அவர்களிடம் கொஞ்சமாவது பெற்றிருந்தோமானால், நாமும் இப்போதுள்ள தொழில்நுட்பத்துடன் இணைத்து மிகத் துல்லியமான அறிவைப் பெற இயலும்.  ஒவ்வொரு ஆண்டும் மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் தண்ணீர் பிரச்சினை வரும், வறட்சி வரும் என்பது நமக்கு அந்தந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் மட்டுமே தெரியும் என்பது வேடிக்கை. 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...