கோவை: குடும்பப் பிரச்சினை காரணமாக கோவையைச் சேர்ந்த பெண் காவலர் பிரியா தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை: குடும்பப் பிரச்சினை காரணமாக கோவையைச் சேர்ந்த பெண் காவலர் பிரியா தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியா (29). இவர், கணவர் பெயர் நவநீதகிருஷ்ணன். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பிரியாவின் கணவர் கிடைக்கும் பணிகளுக்கு செல்வது வழக்கம். கடந்த 2013-ம் ஆண்டு பிரியா ஏ.ஆர். போலீசில் பணியில் இணைந்தார். இவர், தற்போது ரயில்வே காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில வருடங்களாகப் பிரியாவும், அவரது கணவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களது குழந்தைகளை பிரியாவின் தாயார் கவுண்டம்பாளையத்தில் உள்ள அவர்களது வீட்டில் வைத்துப் பராமரித்து வருகிறார்.

இதில், பணியின் நிமித்தம் காவல்துறை குடியிருப்பில் பிரியா தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் இரவு பணி முடிந்து வந்த காவலர் பிரியா, இன்று திடீரென தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர், ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர், இறந்து போன பிரியாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கோவையில் பெண் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.