நீலகிரி : பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நீலகிரி அரசு தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் அரசு தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமாக அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேறி பூங்கா உட்பட 5 பூங்காக்கள், 9 பண்ணைகள் உள்ளன. இங்கு பல ஆண்டுகளாக தினக் கூலி அடிப்படையில் பணிபுரியும் 463 தற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வாராந்திர விடுமுறை நாட்களில் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தொழிலாளர்கள் அனைவரும் பணிக்குச் செல்லாமல் அரசு தாவரவியல் பூங்கா துணை இயக்குனர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.