கோவை : கோவை வந்த தி.மு.க., செயல்தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவை : கோவை வந்த தி.மு.க., செயல்தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவை குட்கா தொழிற்சாலை விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், எம்.எல்.ஏ., நா.கார்த்திக் உள்ளிட்ட தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போடப்பட்டதைக் கண்டித்து கோவையில் இன்று அக்கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

மாநகர பொறுப்பாளர் முத்துசாமி, மாவட்ட செயலாளர்கள் தமிழ்மணி, சி்ஆர்.இராமசந்திரன் ஆகியோர் தலைமையில் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்வதற்காக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் இன்று கோவை வந்தார்.

விமான நிலையத்தில் ஏராளமான தி.மு.க., தொண்டர்கள் திரண்டு நின்று அவரை வரவேற்றனர். ஸ்டாலினுக்கு மலர்கொத்து வழங்கியும், பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது. இதைதொடர்ந்து, திருப்பூர் சென்ற ஸ்டாலின் தொழில் அதிபர் பாலு மணியின் தந்தை பழனிச்சாமி கவுண்டர் மறைவையொட்டி அவரது இல்லத்திற்கு சென்று இரங்கல் தெரிவித்தார்.