தற்போதைய நிலவரப்படி, கோபி, சத்தியமங்கலம் மற்றும் ஈரோட்டின் ஒரு சில இடங்களில் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கோவை: இன்னும் சற்று நேரத்தில் கோவையில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று தினங்களாக மாவட்டத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்து வந்தது.
கோடை வெப்பம் அதிகமாக இருந்த நிலையில் திடீர் மழை நகரப் பகுதிகளை குளிர்வித்தது.
சூறைக் காற்றுடன் பெய்த மழை காரணமாக, மாநகரின் பல இடங்களில் அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று மீண்டும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, கோபி, சத்தியமங்கலம் மற்றும் ஈரோட்டின் ஒரு சில இடங்களில் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.