'பெண் குழந்தைகள் சமையல் கற்றுக்கொள்ள வேண்டும்' : நடிகர் விவேக் கருத்தால் சர்ச்சை

பெண் குழந்தைகள் சமையல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து கூறியிருப்பது பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் குழந்தைகள் சமையல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து கூறியிருப்பது பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 



கோடை விடுமுறை தொடர்பாக நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்து பின்வருமாறு :- 

"மாணவ செல்வங்களே, குழந்தைகளே, கோடையைக் கொண்டாடுங்கள். விளையாட்டுக்குப் பின் நிறைய தண்ணீர் அருந்துங்கள். பெண்களே! உங்களுடை அம்மாவுக்கு அடுப்பறையில் உதவுங்கள்; சமையல் கற்றுக்கொள்ளுங்கள். பையன்களே! உங்களுடைய அப்பா வேலைப் பார்க்கும் இடத்தில் சென்று குடும்பத்துக்காக அவர் எப்படியெல்லாம் உழைக்கிறார் என தெரிந்துகொள்ளுங்கள். பிணைப்பு உறுதியாகும்!" என ட்விட்டில் சொல்லியிருக்கும் விவேக்கின் கருத்துக்கு கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.

பாலின பாகுபாட்டை சமூகத்திலிருந்து அகற்றும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் இந்த சூழலில், பெண்கள் பணிக்கு சென்று குடும்பத்தை நியமித்து வரும் இந்த காலகட்டத்தில் நடிகர் விவேக் பெண்கள் மீது மீண்டும் அடிப்படியை திணிப்பது போன்ற கருத்தைக் கூறியிருப்பது கண்டனத்திற்கு உரியது என்று பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

இன்னும் அடிப்படைவாதம் பேசிக்கொண்டிருக்கும் நபர்கள் நம் நாட்டில் உலவிக்கொண்டிருக்க, பெண்களின் வளர்ச்சி அபரிமிதமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. நாட்டில் பல பெண் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். ஏன்? தமிழகத்தையே ஒரு பெண் முதலமைச்சர் வழி நடத்தி உள்ளார். 

சமையல் செய்வது பெண்களின் வேலை என்பது போன்ற நடிகர் விவேக் பேசியிருப்பது தவறானது என்று சமூக வலைத்தளங்கள் மூலம் அவருக்கு கண்டனக் குரல்கள் ஒலித்து வருகிறது. 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...